Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 108:50:48
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • சுஜாதா 90: தமிழ், அறிவியல், திரை, இலக்கியம் குறித்த நேர்முகத்தின் மறு பதிவு

    01/05/2025 Duration: 17min

    பல்லாயிரக்கணக்கான தமிழ் எழுத்தாளர்கள் இருந்தாலும் “சுஜாதா” அவர்கள் தனித்துவமானவர். இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும், வகைகளிலும் எழுதி குவித்தவர் சுஜாதா. அறிவியலை எளிமைப்படுத்தி, ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக இந்தியாவின் 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' விருது வழங்கி கெளரவித்தது. இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்கிய மிக முக்கிய பொறியாளர் சுஜாதா. பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான சுஜாதாவின் 90 ஆவது பிறந்த தினம் மே 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுஜாதா அவர்கள் 2008 ஆண்டு மறையும் முன்பு 2005 ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் மறு பதிவு இது.

  • ‘லிபரல் கட்சியின் கொள்கைகள் இவை’ - Jacob Vadakkedathu (Liberal)

    01/05/2025 Duration: 06min

    மலையாளி பின்னணி கொண்ட ஜேக்கப் வடக்கெடத்து அவர்கள் ஆஸ்திரேலிய தலைநகர் ACT யிலிருந்து லிபரல் கூட்டணியின் செனட் வேட்பாளராக போட்டியிடுகிறார். பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் குடியேற்றத்தைக் குறைத்தல் உள்ளிட்ட லிபரல் கட்சிக் கொள்கைகள் குறித்து அவருடன் உரையாடுகிறார் SBS மலையாளம் ஒலிபரப்பின் Deeju Sivadas.

  • நான்கு வங்கிகளின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தரவுகள் களவாடப்பட்டன!

    01/05/2025 Duration: 08min

    ஆஸ்திரேலிய மக்களில் 31,000க்கும் மேற்பட்டவர்களின் வங்கி தொடர்பான Passwordகள் திருடப்பட்டுள்ளன. Computers, மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றவர்களை குறிவைத்து அவர்களின் passwordகள் ஒட்டு மொத்தமாக திருடப்படுள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றைசெல்.

  • கண் பார்வையைக் காப்பாற்ற புதிய வழிகளைக் கையாளும் தமிழர்

    01/05/2025 Duration: 12min

    பேராசிரியர் சந்திரா பாலாவின் அறிவியல் முயற்சிகள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவரது பின்னணி, மற்றும் அவரது ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் சந்திரா பாலாவுடன் குலசேகரம் சஞ்சயன் 2017ஆம் ஆண்டில் பேசியிருந்தார், அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.

  • கிரீன்ஸ் கட்சி அதிகாரபூர்வமான பிரச்சாரத்தை இன்று துவக்கியது

    01/05/2025 Duration: 05min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1 மே 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • Who's Right? Who's Left? What role will religion play in this election? - SBS Examines : தேர்தல் வாக்களிப்பில் மத நம்பிக்கை பங்கு வகிக்கிறதா?

    30/04/2025 Duration: 06min

    The differing and diverse religious beliefs Australians hold will influence their vote this election. - ஆஸ்திரேலியா மதச்சார்பற்ற அரசு உருவாவதத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு கொண்டுள்ளது. வரவிருக்கும் பெடரல் தேர்தலில் மத நம்பிக்கை எவ்வாறு பங்கு வகிக்கும் என்பதை SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – ஆபாச படம் பார்த்தல்

    30/04/2025 Duration: 10min

    டாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரின் நான்காம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி

    30/04/2025 Duration: 08min

    தமிழ்நாட்டில் கண்ணகி - முருகேசன் ஆணவப்படு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது, காஷ்மீரில் தொடரும் பதற்றம், இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ள தேர்தல் ஆணையம், தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாடு குறித்து தொடரும் சர்ச்சை உள்ளிட்ட செய்திகளுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஏன் கடந்த ஆஸ்திரேலிய தேர்தல்களைவிட இது மிகப் பெரிய தேர்தல்?

    29/04/2025 Duration: 07min

    ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் இதுவரை நடந்த தேர்தல்களோடு ஒப்பிடும் போது மிகப்பெரிய தேர்தல் என்று பார்க்கப்படுகிறது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • பீட்டர் டட்டனின் அலுவலகத்தை சேதப்படுத்திய பெண் மீது வழக்குப்பதிவு

    29/04/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/04/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

  • NSW மாநிலத்தில் 18 வயது இந்திய இளைஞர் சுட்டுக்கொலை: பிந்திய தகவல்கள்

    29/04/2025 Duration: 03min

    நியூ சவுத் வேல்ஸ் ஹண்டர் பகுதியில் 18 வயது இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கனடா வான்கூவர் திருவிழாவில் கார் மோதி 11 பேர் பலி: நடந்தது என்ன?

    29/04/2025 Duration: 08min

    கனடாவின் வான்கூவர் நகரத்தில் நடைபெற்ற பிலிப்பினோ திருவிழா சனக்கூட்டத்தில், நபர் ஒருவர் காரை ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். [[Warning contains distressing description of attack aftermath]]

  • உக்ரைனுடன் மூன்று நாள் போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

    29/04/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 29/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • Who's Right? Who's Left? How will migrant communities vote this election? - SBS Examines : இடதுசாரி வலதுசாரி யார்? புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது?

    28/04/2025 Duration: 07min

    Migration policies are a hot topic this election, but it's not clear how our diverse communities will cast their vote. - ஆஸ்திரேலியாவில் உள்ள பல்லின பல்கலாச்சார சமூகங்கள் அரசியலை எவ்வாறு அணுகுகின்றன. புலம்பெயர்த்தோரின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு உள்ளது? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாணவர் விசா கட்டணம் அதிகரிக்கப்படும்- லேபர் கட்சி

    28/04/2025 Duration: 02min

    சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், தமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றுக்கு நிதியளிக்கப்படும் என லேபர்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கடலில் காணாமல் போன மகன் பற்றிய செய்திக்காகக் காத்திருக்கும் சிட்னி தமிழ் குடும்பம்

    28/04/2025 Duration: 13min

    சிட்னி நகரைச் சேர்ந்த அட்சயன் அருணாசலம் என்ற 24 வயது இளைஞர் ஒருவர், புனித வெள்ளி அன்று கடற்கரைப் பக்கம் சென்றிருந்த வேளை பாரிய அலை வந்ததில், அவர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் தேடுதல் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளமையால் அவரது குடும்பத்தினரின் சோகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இது குறித்த மேலதிக தரவுகளை அறிய அட்சயன் அருணாசலம் அவர்களின் தாய் மாமன், திரு திருநந்தக்குமார் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    28/04/2025 Duration: 09min

    பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 200 'ஸ்லீப்பர் செல்கள்' கைது மற்றும் ஆயுததாரிகளின் வீடுகள் வெடி வைத்து தகர்ப்பு; தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி பதவிவிலகல்; பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை இடம்பெறும் எந்த கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என்று திருமாவளவன் அறிவிப்பு; பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய த.வெ.க. மாநாடு; போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • தேர்தல் பிரச்சாரங்கள் கடைசி கட்டத்தை எட்டுகின்றன

    28/04/2025 Duration: 08min

    எதிர்வரும் சனிக்கிழமை ஃபெடரல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, ஐந்தாவது வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • வாழ்க்கைச் செலவு தொடர்பில் அரசியல் தலைவர்கள் நேரடி விவாதம்!

    28/04/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 28/04/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • ‘எங்கள் கட்சி மக்களுக்கான அதீத சுதந்திரத்தை வலியுறுத்துகிறது’ – Craig Kelly (Libertarian)

    27/04/2025 Duration: 07min

    SBS ஊடகம் கடந்த வியாழக்கிழமை (24 April), NSW மாநிலத்தின் Parramatta எனுமிடத்திலுள்ள Centenary Square யில் “Election Exchange” எனும் நிகழ்வை நடத்தியது. பெடரல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் பின்னணியில் “Election Exchange” எனும் சந்திப்பில் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அவ்வேளையில் நாம் Libertarian கட்சியின் சார்பில் செனட் அவைக்கு போட்டியிடும் Craig Kelly அவர்களை சந்தித்து உரையாடினேன். அந்த உரையாடலின் முக்கிய பகுதி. தொகுத்து முன்வைப்பவர்: றைசெல்.

page 23 from 43